கடைசி விவசாயி
கடைசி விவசாயி
விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள கடைசி விவசாயி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.. காக்கா முட்டை மணிகண்டன் காக்கா முட்டை படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி படம் உருவாகியுள்ளது. காக்கா முட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை என வித்தியாசமான திரைக்கதைகளை விருது பெறும் படங்களாக இயக்கி வரும் மணிகண்டன் இயக்கத்தில் மற்றொரு சிறந்த படைப்பாக கடைசி விவசாயி உருவாகியுள்ளது. யார் கடைசி விவசாயி? கடைசி விவசாயி படத்தில் விஜய்சேதுபதி கடைசி விவசாயியாக நடித்திருப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, தற்போது வெளியாகியுள்ள டிரைலரில் கடைசி விவசாயியாக நல்லாண்டி எனும் முதியவர் படத்தின் நாயகனாக நடித்துள்ளது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்துள்ளது.
Comments