க(ருவ)ல்லறை
க(ருவ)ல்லறை
கவிதை
என்னை சுமந்த
உன் கருவறையும்
இன்று கல்லாகி
போனதோ அம்மா !
ஒரு பெண்ணாய் பிறந்தும்
என்னை குப்பைத்
தொட்டியில் எறிந்தாயே
நான் உனக்கு பெண்ணாய் பிறந்த காரண்த்திற்காக ?
குப்பைத் தொட்டியும் கூட
ஒரு தாயாகி போனதே
அந்த சில நிமிடங்கள் ?
நீ என்னை தூக்கிஎறிந்து
சென்ற போது ....
பெண்ணுக்கு பெண்ணே
எதிரியாகி போனதோ
இந்த கலியுக அன்னையர்களால் ....!
பாசமும் இங்கு உருகும்
மெழுகாய் போனதே….?
By
நித்யஸ்ரீ
Comments