நானே மனிதத்தின் எதிர்காலம்
என் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள். நானே மனிதத்தின் எதிர்காலம் நித்யானந்தா
.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா மீது ஆரம்ப காலம் முதலே குற்றச்சாட்டுகளும் புகார்களும் வந்தாலும அவரோ, எங்கோ இருந்தபடி தினசரி தனது பேஸ்புக் பக்கம் மூலம் சீடர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
நித்யானந்தா சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் தோன்றி பக்தர்கள் மத்தியில் உரையாற்றியபோது
எனது சீடர்கள் என்னை நினைத்து பரணி தீபத்தை கையில் ஏந்தியபடி ஆசிரமத்தை சுற்றி வருகிறார்கள். உண்மையான கைலாசத்தை நான் உருவாக்குகிறேன். எனது உடலைப் பயன்படுத்தி பரமசிவன் இவ்வுலகில் கைலாசத்தை உருவாக்குகிறார்.
ஸ்ரீகைலாசா திட்டத்தை தொடங்குகிறோம். இது ஒரு நாட்டின் குடியுரிமை அல்ல. கைலாசா என்பது 'எல்லைகளற்ற ஆன்மீக பெருவெளி.'
கைலாசா மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீங்கள் உங்கள் செல்லப்பிராணிகளையும் கைலாசாவில் இணைக்கலாம். அவற்றுக்கும் சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் நம் மீது பழி சுமத்தப்படும் போது நாம் நேர்மையானவர்கள் என மெய்ப்பிக்கிறோம். அதன் மூலம் நமது புகழ் உயருகிறது. மேலும் மேலும் பலர் நம் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.
ஒருவரை தாக்குபவர்கள் சரித்திரம் படைக்க மாட்டார்கள். தாக்குதலை எதிர் கொள்பவர்தான் வரலாறு படைப்பார்கள்.
என் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள். நானே மனிதத்தின் எதிர்காலம். இவ்வாறு அதில் பேசியுள்ளார்.
Comments