சச்சினுக்கு ஆலோசனை வழங்கிய குரு
சச்சின் டெண்டுல்கருக்கு ஆலோசனை வழங்கிய ஓட்டல் ஊழியர்
கடந்த 2001 ஆம் ஆண்டு இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது . சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் ஹோட்டலில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
சச்சின் டெண்டுல்கரின் அறைக்கு உணவு கொண்டு வந்த ஊழியர் ஒருவர் தன்னை சச்சினின் மிகப்பெரிய ரசிகர் என்று கூறி மேலும் சச்சின் தனது முழங்கை பாதுகாப்புக்கான உறையை (Elbow Guard) அணிந்து கொண்டு பேட்டிங் செய்யும் போது அவரது பேட்டிங் முறையில் மாறுதல் ஏற்படுவதாகவும், அதில் அவர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அந்த ஊழியர் ஆலோசனை கூறியுள்ளார்.
தனது முழங்கை உறை குறித்து ஆலோசனை கூறிய ஒரே நபர் அந்த ஹோட்டல் ஊழியர் தான் என்றும், அதன் பிறகு சச்சின் தனது முழங்கை உறையை மாற்றியமைத்ததாகவும் அதன் பனி பேட்டிங் மிக எளிதாக இருந்ததது எனவும் யாரும சொல்லாத ஒன்றினை சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த நபரை கண்டுபிடிக்க தனக்கு உதவுமாறு நெட்டிசன்களிடம் கேட்டுக்கொள்வதாக ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சச்சினுக்கு ஆலோசனை கூறிய அந்த நபர் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த குருபிரசாத் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்துப் பேசிய குருபிரசாத், “முழங்கை உறையால் சச்சினின் ஆட்டம் பாதிக்கப்படுவதாக தான் உணர்ந்தேன். அதை அவரிடம் தெரிவிக்க ஒரு வாய்ப்பு கிடைத்த போது அதை பயன்படுத்திக் கொண்டேன்.
எனது ஆலோசனையை சச்சின் ஏற்றுகொண்டது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. சச்சினுக்கு ஆலோசனை கூறியது எனது வாழ்வில் மறக்க முடியாத தருணம்” என்று அவர் கூறினார்.
Comments