ஜார்கண்ட் முதல்வர் மீது போலீசில் புகார்

 முதல்வராக பதவி ஏற்க உள்ள ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட முதல்வர் பதவியில் இருந்து விலக உள்ள ரகுபர் தாஸ்க்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.


தன்னை சாதி ரீதியாக தேர்தலின் போது ஆட்சேபனைக்குரிய வகையில் ரகுபர்தாஸ் பேசியதாக போலீசில் கடந்த டிசம்பர் 19ம் தேதி ஹேமந்த் சோரன் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை ஏற்று ரகுபர் தான் மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.


ஜாரக்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. ஜேஎம்எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் வரும் 29ம் தேதி ராஞ்சியில் முதல்வராக பதவி ஏற்கிறார்


ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலம் மிகிஜாம் காவல் நிலையத்தில் முதல்வர் ரகுபர் தாஸ் மீது கடந்த டிசம்பர் 19ம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரில் ரகுபர் தாஸ் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னை சாதி ரீதியாக அவதூறாக விமர்சித்ததாக கூறியுள்ளார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் முதல்வர் ரகுபர் தாஸ்க்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளார். இந்த தகவலை ஜம்ரதா மாவட்ட எஸ்பி அனுஷ்மான் குமார் தெரிவித்தார். எஸ்சி எஸ்டி தடுப்பு சட்டத்தின் கீழ் ரகுபர் தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,