நாளை கட்டாயம் பணிக்கு வரவேண்டும்
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் சென்னையில் நாளை 23,12,2019 பேரணி நடத்த முடிவெடுத்துள்ள நிலையில், போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை செய்தியில், போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை வழங்கப்பட்ட விடுப்பு ரத்து செய்யப்படுகிறது. அதனால் அவர்கள் வழக்கம்போல் நாளை கட்டாயம் பணிக்கு வரவேண்டும். யாருக்கும் விடுப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை நடைபெறும் பேரணியில் தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ள கூடிய சூழ்நிலையில், போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை பணிக்கு கட்டாயம் வர வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Comments