மோடிக்கு கோவில்

மோடிக்கு கோவில்



 


 


திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது எரகுடி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சங்கர்.. 50 வயதாகிறது. இவர் ஒரு விவசாயி.. கல்யாணமாகி பானுமதி என்ற மனைவி உள்ளார்.. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். பாஜக தொண்டர் சங்கரை பொறுத்தவரை, இவர் ஒரு பாஜக தொண்டர்.. எரகுடி விவசாய சங்க தலைவரும்கூட.. இது எல்லாவற்றிற்கும் மேலாக சின்ன வயசில் இருந்தே நரேந்திரமோடியின் வெறித்தனமான ஃபேனாக இருந்திருக்கிறார்..


"சின்ன வயசில் இருந்தே பிரதமர் மோடின்னா எனக்கு உசுரு.. ரொம்ப அன்பு.. அவர் கொள்கை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. என் சொந்த செலவில் அவருக்கு ஒரு கோயில் கட்டணும்னு ரொம்ப நாள் ஆசை.. அது இப்போ நிறைவேறியிருக்கு" என்று மகிழ்ச்சி கொப்பளிக்க சொல்கிறார் திருச்சி விவசாயி சங்கர் !


 


 


   மோடி பிரதமர் ஆனதில் இருந்து மோடியின் பக்தராகவே மாறிவிட்டார். விவசாயி பிரதமருக்கு ஒரு கோயிலை கட்ட ஆசைப்பட்டார்.. அதுவும் எரகுடியில் சொந்தமாக உள்ள விவசாய தோட்டத்தியே இந்த கோயிலை கட்ட ஆசைப்பட்டார்.. பார்ப்பதற்கு சின்ன கோயிலாகதான் இருக்கிறது.. ஆனால் சொந்த செலவில் இதை கட்டி, அதற்குள் மோடியின் ஒரு சிலையையும் வைத்துள்ளார்..      தினமும் மோடி சிலைக்கு பாலாபிஷேகம், தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தி வருகிறார்.



 


 சின்ன வயசில் இருந்தே பிரதமர் மோடி மீது அன்பு எனக்கு.. எந்தவித எதிர்பார்ப்பும், யாருடைய உதவியும் இல்லாமலேயே என் சொந்த செலவில் இந்த கோயிலை கட்ட விரும்பினேன். விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் அப்போது என்னால் கோயில் கட்ட முடியவில்லை. இப்போ விவசாயத்தில் ஓரளவு பணம் கிடைச்சது.. அதனால 8 மாசத்துக்கு முன்னாடிதான் கோயில் கட்ட ஆரம்பிச்சேன்..


கட்சியின் மூத்த தலைவர்களை வரவழைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதுதான் இப்போது என் ஒரே லட்சியம்.. கட்சியையும் தாண்டி பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர் மோடியின் திட்டங்கள் எல்லாமே எனக்கு பிடிச்சு போயிடுச்சு.. அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டுதான் இந்த கோயிலையே கட்டி உள்ளேன்' என்றார் பூரிப்புடன்.


மோடி திரும்பவும் ஆட்சிக்கு வர வேண்டும் என பழனி கோயிலுக்கு வேண்டி கொண்டிருக்கிறேன். இதுக்காகத்தான் ஒரு வருஷமா முடி வளர்த்துட்டு வர்றேன்.. இந்த கோயிலின் கும்பாபிஷேகத்தை நல்லபடியா முடிச்சிட்டுதான், பழனி கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி, தங்கத்தேர் இழுக்க உள்ளேன்" என்றார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,