ரெட் அலெர்ட்டி ல் டெல்லி

*வரலாறு காணாத குளிரால் டெல்லிக்கு 'ரெட் அலர்ட்'!*


டெல்லியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் மிக குறைவான குளிர் பதிவாகியுள்ளது. இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு குறைந்தபட்ச


வெப்பநிலையில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் அடர் மூடுபனி தொடரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


காற்றுமாசுக்கு அடுத்த பிரச்னையாக டெல்லி மக்கள் தற்போது குளிரால் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். டெல்லி, உத்தரப்பிரதேசம்,


ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு குளிர் நிலவும் சூழலில் உஷாராக இருக்க பொது மக்களுக்கு


ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு பனியின் தாக்கம் கடுமையாக உள்ளது.


இல்லத்தரசிகளுக்கு கடும் குளிர் சவாலாகவே உள்ளது. உணவு பழக்க வழக்கங்களை முற்றிலுமாக மாற்றிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவு பழக்கத்துக்கு அவர்கள் மாறியுள்ளனர்.


குளிர் காரணமாக சாலையோரம் வசிப்போருக்கு டெல்லி அரசு சார்பில், தற்காலிக முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ்


மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு போர்வை, கம்பளி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு இரவு நேரம் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. கடுங்குளிர் காரணமாக விமானம், ரயில்கள் உள்ளிட்டவைகளும் காலதாமதமாகவே பயணிக்கின்றன. சில நேரங்களில் அவை ரத்தும் செய்யப்படுகின்றன.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,