ரயில் முன் பதிவில் மாற்றம்

ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்வதற்கு இனி எந்த கட்டுப்பாடும் இல்லை.. இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே தளர்த்தி இருக்கிறது. இது பொதுமக்களுக்கு பெரிதும் பயன் தரும் முடிவாகும்.
ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளை வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட்டிகளை முன்பதிவு செய்ய இது வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இதன்படி . மொத்த எண்ணிக்கையில் பயணிகள் முன் பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. இதனால் கல்விச் சுற்றுலா, சுற்றுலா செல்வோர், திருமணம், கோயில் நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாகச் செல்வோர் . டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிரமப்பட்டு வந்தனர்.இந்நிலையில் தெற்கு ரயில்வே அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. அதன்படி கல்விச் சுற்றுலா, விளையாட்டுப் போட்டிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, மொத்தமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது.
எனவே இனி விளையாட்டு போட்டிக்கு செல்வோர், கல்விச் சுற்றுலா, சுற்றுலா செல்வோர், திருமணம், கோயில் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாக செல்வோர் அதற்குத் தேவையான ஆவணங்களை அளித்து இனி எந்த வகுப்பிலும், எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Comments