அமெரிக்கா முந்தியது
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் இந்தியாவில் ரிலீசாகும் முன்பே அமெரிக்காவில் ரிலீசாகிறது.
தர்பார் திரைப்பட பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08ம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் ஜனவரி 9ம் தேதி தர்பார் ரிலீசாகவுள்ள நிலையில், ஒரு நாள் முன்பே அமெரிக்காவில் வெளியாகிறது.தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளும் சேர்த்து, அமெரிக்காவில் சுமார் 250 க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் தர்பார் படம் திரையிடப்படுகிறது. மேலும் தமிழ் சினிமா நடிகர்களிலேயே நடிகர் ரஜினிகாந்துக்கு அமெரிக்காவில் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது , தர்பார் திரைப்படம் அமெரிக்காவில் வட அமெரிக்காவின் முன்னணி ஊடகமான பிரைம் மீடியா, கடந்த 10 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. வரும் பொங்கலுக்கு ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படத்தை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் இணைந்து வெளியிடுகின்றன.
Comments