இறுதி பட்டியல்

உள்ளாட்சித் தேர்தலில் 2,32,000 வேட்பாளர்கள் போட்டி


ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில்  2,31,890 பேர் போட்டியிடுவதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27,30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, வேட்புமனுத்தாக்கல் முடிந்து இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


அதன்படி, 18,570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்தேர்தலில் போட்டியிட 3,02,994 பேர் மனுத்தாக்கல் செய்திருந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இதில் 48,891 வேட்பாளர்கள் தங்களது மனுக்களை திரும்ப பெற்றதாகவும், 3,643 மனுக்கள் பரிசீலனைக்கு பின்பு நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனவே, நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 73 ஆயிரத்து 405 பதவிகளுக்கு, 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 பேர் போட்டியிட உள்ளனர்.


கிராம வார்டு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு ஒரு லட்சத்து 70,898 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 35,611 பேரும், ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான போட்டியில் 22,776 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 2,605 வேட்பாளர்களும் களத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,