வென்றான் காவலன்
*10 நாட்களில் காவலன் செயலியை மூன்றரை லட்சம் பேர் பதிவிறக்கியுள்ளனர் - ஏ.கே. விஸ்வநாதன்*
காவலன் செயலியை கடந்த 10 நாட்களில் சுமார் மூன்றரை லட்சம் பேர் செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் காவலன் செயலி குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு குற்றங்கள், திருட்டு சம்பவங்கள் பெருமளவில் குறைந்து விட்டதாக கூறினார்.
Comments