அலை மோதும் பக்தர்கள்
*பம்பையில் கட்டுக்கடங்காத கூட்டம் : பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்*
சபரிமலை ஐயப்பன் கோயிலில், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளதால் இந்தியா முழுவதில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் உள்ளது.
இதனால், நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்துவதற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பம்பையில் இருந்து மலையேறும் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஒவ்வொரு பகுதியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவதால், ஐயப்பனை தரிசிக்க 18 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Comments