சபாஷ் சரவணன்
லெஜெண்ட் சரவணன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, ஹீரோவாகவும் களமிறங்கி உள்ளார் சரவணா ஸ்டோர் சரவணன். . நாயகியாக கீத்திகா திவாரி நடிக்கிறார். ஜேடி - ஜெர்ரி இயக்குகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
ரூ.10 கோடி செலவில் பிரமாண்டமாக அரண்மனைப் போல் அரங்கம் அமைத்து படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் இவர் ஆடும் முதல் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அண்ணாச்சியின் நடனத்தை சக கலைஞர்களே வியந்துள்ளனர்.
Comments