சூல் தமிழ் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் சோ.தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது


கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமான எழுத்தாளர் சோ.தர்மன். இவரின் 'சூல்' என்ற நாவலுக்காக தற்போது சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சோ.தர்மராஜ் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சோ.தர்மன் என்ற பெயரில் நாவல்களை எழுதி வருகிறார். ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட 7 நூல்களை தர்மன் எழுதியுள்ளார். 



சாகித்ய  அகாடமி விருது குறித்து கருத்து  அவர், “என்னுடைய நாவலுக்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. நான் நடிகன் அல்ல. நான் எழுத்தாளன். நான் சூரியகாந்தி போல இல்லாமல், ஒரு மூலிகை போல இருப்பேன். எந்த விளம்பரமும் இல்லாமல் பணியாற்றி வருகிறேன். அங்கீகாரம் கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது” என்று தெரிவித்தார். 


மிக உண்மையான வார்த்தைகள் 


அவருக்கு எங்களது பாராட்டுதல்கள் 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,