சென்னை பல்கலைக்கழகம் விடுமுறையில்

 


 


நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலை பெற்றுள்ள இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டங்களும்  டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்களின்  போராட்டமும் நீடிக்கிறது


டெல்லி மாணவர்கள் போராட்டம் வன்முறையில் முடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து  போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் திரண்டு  போராட்டம் நடத்தினர். 


 


இதையடுத்து சென்னை பல்கலைக்கழகத்துக்கு டிச.23 வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. டிச.23 வரை வகுப்புகள், தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகிறது என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிச. 24 முதல் ஜன.1 வரை பல்கலைக்கழகத்திற்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக  சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஜனவரி 1 வரை விடுமுறை நீடிக்கிறது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,