உதயநிதி கைது


குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்


 


குடியுரிமை திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை கண்டித்து அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும்நிலையில் தற்போது நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள்  போராட்டத்தை நடத்தி வருகின்றன.  சென்னையில் திமுக சார்பில் இளைஞர் அணி செயலாளர்  உதய நிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திமுகவினர் மத்திய அரசை எதிர்த்து கண்டனக்குரல் எழுப்பி  குடியுரிமை திருத்த மசோதா நகலை கிழித்து எறிந்தனர்.


குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,