போராட்டம் தொடரும் மம்தா
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை குறித்து ஐ.நா. பொதுச்சபை போன்ற சார்பற்ற அமைப்பு சார்பில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
கொல்கத்தாவில் 4-வது நாளாக மமதா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது:
நாடு விடுதலை அடைந்து 73 ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இந்தியர்தான் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த தேசத்தை பாஜக பிளவுபடுத்தி வருகிறது.
குடியுரிமை சட்ட திருத்தம் திரும்பப் பெறும் வரை நமது போராட்டங்கள் தொடர வேண்டும். ஐநா அல்லது தேசிய மனித உரிமைகள் ஆணையம் போன்ற எந்த வித சார்பும் இல்லாத அமைப்பு பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களின் கருத்தை அறிய வேண்டும்.
இவ்வாறு மமதா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
Comments