திட்ட வட்டமாக இல்லைஎன்.ஆர்.சியை ஆந்திராவில் அமல்படுத்தமாட்டோம் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கடப்பாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, என்.ஆர்.சி. குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று சிறுபான்மை சகோதரர்கள் எனக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
என்.ஆர்.சியை ஆந்திராவில் அமல்படுத்தப்போவது இல்லை என்பதில் உறுதியாக உள்ளோம். என்.ஆர்.சி.க்கு நாங்கள் ஆதரவு தரமாட்டோம்.


ஏற்கனவே துணை முதல்வர் அஸ்மத் பாஷா, முஸ்லிம்களின் நலன்களுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையையும் ஆதரிக்க மாட்டோம் என கூறியுள்ளார். நாங்கள் சிறுபான்மை சமூகத்துக்கு ஆதரவாகவே இருப்போம் என்றார்.


லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரித்து வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,