உயர்ந்த உதயநிதி இமேஜ்

உயர்ந்த உதயநிதி இமேஜ். தேசிய அளவில்  வரவேற்பு பெற்ற போராட்டம்..


 


சென்னையில் திமுக மாவட்ட செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு கட்சியினர் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சீனியர்கள் மத்தியில் ஸ்டாலின் இமேஜ் ஒரே நாளில் உயர்ந்துள்ளதாம். குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் திமுக போராட்டம் நடத்தியது. தமிழகம் முழுக்க திமுகவினர் போராட்டம் நடத்தினார்கள்.


 இதில் சட்ட நகலை எதிர்த்து திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போராட்டம் செய்தார்.. இதில் மோடி ஒழிக, அமித் ஷா ஒழிக என்றும் உதயநிதி ஸ்டாலின் கோஷம் போட்டார். உதயநிதியை தொடர்ந்து திமுகவினர் பலரும் மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்


. தேசிய அளவில் இது தொடர்பான செய்திகள் வலம் வருகிறது. இதனால் உதயநிதி ஸ்டாலின் போராட்டமும் நாடு முழுக்க பெரிய அளவில் பேசப்பட்டது. தேசிய சேனல்கள் உதயநிதி ஸ்டாலின் போராட்டத்தை பெரிய அளவில் கவர் செய்ததும் குறிப்பிடத்தக்கது ஆகவே தேசிய அளவில் இந்த மசோதாவை எதிர்க்கும் மக்களுக்கு திமுக மீது ஒரு மதிப்பு வந்துள்ளது. மக்களுக்கும் உதயநிதி முகம் தெரிய வந்துள்ளது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,