கேக்கிலும் நான் ராஜா

இளையராஜா உருவ கேக்


                     இசைஞானி இளையராஜாவுக்கு `பாரத ரத்னா' விருது வழங்க வலியுறுத்தும் வகையில் சர்க்கரை மற்றும் முட்டையைக் கொண்டு இளையராஜா உருவத்தில் 5 அடி உயர கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.


 


      ராமநாதபுரம் பாரதிநகரில் உள்ளது ஐஸ்வர்யா பேக்கரி. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு வகையிலான கேக்குகளைத் தயாரிப்பது பேக்கரி உரிமையாளரின் வழக்கம்.


 


 


கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, 80 கிலோ சர்க்கரை, 400 முட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு மகாகவி பாரதியாரின் உருவத்தினாலான கேக் ஒன்றை உருவாக்கி காட்சிக்கு வைத்திருந்தனர்.


 


                     , இந்திய திரையுலகில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசை அமைத்ததுடன், சிம்பொனி இசை ஆல்பத்தையும் வெளியிட்ட இசைஞானி இளையராஜாவுக்கு நாட்டின் உயரிய விருதான `பாரத ரத்னா' விருதை வழங்க வலியுறுத்தி கேக்கினால் ஆன இளையராஜாவின் முழு உருவச் சிலை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.


5 அடி உயரத்தில் உள்ள இந்த கேக்கை 50 கிலோ சர்க்கரை, 250 முட்டைகள் மற்றும் மாவைக் கொண்டு 4 தொழிலாளர்கள் இணைந்து 4 நாள்களில் உருவாக்கியுள்ளனர்.



பேக்கரியின் முன்புறம் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இளையராஜா உருவ கேக்குக்கு அருகிலேயே இளையராஜாவின் சிறப்பைப் போற்றும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. பேக்கரிக்கு வருபவர்களை மட்டுமல்ல அந்த வழியாகச் செல்பவர்கள் பலரையும் இந்த இளையராஜா உருவத்திலான கேக் கவர்ந்து வருகிறது


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,