அதிகபட்சமாக விவாதங்களில் ரவீந்திரநாத் குமார்

 அதிகபட்சமாக 42 விவாதங்களில் பங்கேற்றரவீந்திரநாத் குமார்       நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து இரு அவைகளுக்குமான இணையத்தில் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இரு அவைகளிலும் இருக்கும் தமிழக எம்.பி-க்களின் செயல்பாடுகளுடன் ஒப்பிடுகையில் பா.ம.க-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் கடைசி இடத்தில் இருக்கிறார். அவரது வருகைப் பதிவு வெறும் 15 சதவிகிதம் மட்டுமே.  

 

                

 

                தமிழகத்தின் 39 மக்களவை உறுப்பினர்களில் 26 பேர் முதல் முறையாக எம்.பி-யாகத் தேர்வானவர்கள். அதனாலோ என்னவோ பெரும்பாலான எம்.பி-க்கள் கூட்டங்களில் பங்கேற்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். 39 எம்.பி-க்களில் மூன்று பேர் 100 சதவிகிதம் வருகைப் பதிவு வைத்துள்ள நிலையில், 9 பேர் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான வருகைப் பதிவை வைத்திருப்பதை இணைய தகவல் தெரிவிக்கிறது.  

 

              அ.தி.மு.க சார்பாக மக்களவைக்குத் தேர்வான ஒரே எம்.பி-யான ரவீந்திரநாத் குமார் இதுவரை நடைபெற்ற 42 விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார். தமிழக எம்.பி-க்களில் அவரே அதிக எண்ணிக்கையிலான விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார். அ.தி.மு.க-வின் ஒரே எம்.பி என்பதால் அவருக்கு அனைத்து விவாதங்களிலும் பேசும் வாய்ப்பு கிடைப்பதுவும் அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவரது வருகைப் பதிவு 79 சதவிகிதமாக உள்ளது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,