வாட்டி வதைக்கும் குளிர்
*டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.*
கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலை புத்தாண்டு வரை தொடரும் எனவும் கூறியுள்ளது.
கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக விமான ஓடு பாதையில் 50 மீட்டர் முதல் 175 மீட்டர் வரை மட்டும் வெளிச்சம் தென்படுவதால் நான்கு விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளதாக விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 24 ரயில்களும் தாமதமாக டெல்லிக்கு வந்து சேர்ந்தன. குறைந்த வெளிச்சம் காரணமாக ஹரியானாவின் ரிவாரி மாவட்டத்தில் எதிர்ரெதிர் திசையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மோதி இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
Comments