குடியுரிமை திருத்த சட்டத்துக்கு  ஆதரவு







 







,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு  ஆதரவாக பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த சுமார் 1,100 கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் குரல் கொடுத்து உள்ளனர்.

 




இதையொட்டி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாட்டில் வேண்டுமென்றே பயத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி, வன்முறைக்கு வழிநடத்துகின்றனர். பயம், சித்தப்பிரமை சூழல் உருவாகிறது என்பதை மிகுந்த வேதனையுடன் கவனிக்கிறோம்.

மறந்துபோன சிறுபான்மையினருக்காக எழுந்து நின்று, இந்தியாவின் நாகரீகத்தை நிலை நிறுத்தியதற்காகவும், மத ரீதியிலான துன்புறுத்தல்களை சந்தித்தவர்களுக்கு புகலிடம் அளிப்பதற்காகவும் நாடாளுமன்றத்தை பாராட்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், மாநிலங்களவை எம்.பி. சுவபன் தாஸ்குப்தா, ஷில்லாங் ஐ.ஐ.எம். தலைவர் சிஷிர் பஜோரியா, நாளந்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சுனைனா சிங், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக டீன் அய்னுல் ஹசன் உள்ளிட்டோர் கையெழுத்து போட்டுள்ளனர்





Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,