கிரண்பேடி முட்டுக்கட்டை
புதுச்சேரி வளர்ச்சிக்கு கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருக்கிறார்- அமைச்சர் நாராயணசாமி
திருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் வருகை தந்துள்ளார். அவரது வருகையையொட்டி, திருநள்ளாறில் துணை ராணுவ வீரர்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதியுடன் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்டோரும் தரிசனம் செய்தனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று சந்தித்து பேசியபோது , அவரிடம் மனு ஒன்றை நாராயணசாமி அளித்து உள்ளார்.
இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் நாராயணசாமி,
புதுச்சேரியின் வளர்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். அவரை திரும்பப்பெற வேண்டும் என ஜனாதிபதியிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது என கூறினார்.
Comments