பந்த் விரட்டிய பந்துகள்

  நன்றி சொன்ன இளம் கிரிக்கெட் வீரர்


 மேற்கிந்திய தீவகளுக்கு எதிரான முதல் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்திய இளம் வீரர் ரிஷப் பந்த், 71 ரன்களை குவித்தார் 


கடந்த சில போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதால்     ரசிகர்களின் கேலிகள் மற்றும் கிண்டல்களுக்கு ஆளானார். தோனியின் மாற்றாக பார்க்கப்படும் ரிஷப்பை தோனி பல வாறு  ரசிகர்கள் கலாய்த்தனர்.


 சென்னையில் நடந்த முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் ரிஷப் பந்த் 71 ரன்களை அடித்துள்ளார். மேலும் தனக்கு ஆதரவு தெரிவித்த சென்னை மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

 இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்துள்ள போதிலும், ரிஷப் பந்த் அதிகபட்சமாக 71 ரன்களை குவித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி, கே.எல். ராகுல் உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த், அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்து அணியை நிலைநிறுத்தினார்.


 


பந்த் தனது முயற்சியில் ரன்களை குவித்தாலும், அணியின் வெற்றிக்கு அது உதவி செய்யவில்லை. ஆயினும் அவரது ஆட்டத்தின்போது ரிஷப் பந்த்தின் பெயரை முழக்கமிட்டு சென்னை ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தினர்.
, அவரை பல்வேறு மாநிலங்களின் ரசிகர்கள் வெறுப்பேற்றி வந்தபோது இந்த போட்டியில்  பந்த்தின் அதிரடி ஆட்டத்தை சென்னை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்."தினந்தோறும் முன்னேற்றி கொள்கிறேன்"


இந்நிலையில் தன்னை உற்சாகப்படுத்திய சென்னை ரசிகர்களுக்கு ரிஷப் பந்த் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடைய திறமைகளை தினந்தோறும் முன்னேற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,