சீமான் போராட்டம்
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிச.18-ல் போராட்டம்
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 18-ல் சென்னையில் போராட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழர்களைப் புறக்கணித்தும், இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்தியும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை (#CAB) உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாக 18-12-2019 காலை 10 மணியளவில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
Comments