பட்டம் பறந்து போனதே


சென்னையில் கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க கூடிய ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்பதை கடைசி நேரத்தில் தவிர்த்துள்ளார் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.




லோக்சபா எம்பியான பாரிவேந்தர் நடத்தக்கூடிய சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் இன்ஸ்டியூட் ஆப் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இன்று 28.12.2019 சனிக்கிழமை சிறப்பு பட்டமளிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதில் கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது


    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிகழ்ச்சியை அவர் ரத்து செய்துவிட்டார்.


   ஆழ்வார்களில் ஒருவரான, ஆண்டாள் தொடர்பாக வைரமுத்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து, அதற்கு, தமிழக பாஜக தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்ததை ராஜ்நாத் சிங்கிற்கு தமிழக பாஜக நிர்வாகிகள் நினைவுபடுத்தியதாகவும், எனவே இந்த நிகழ்ச்சியை தவிர்த்து விடுமாறு கேட்டுக் கொண்டதாகவும், இதை அவர் ஏற்று சென்னை வருகையை தவிர்த்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
      பின்னணி பாடகி சின்மயி வைரமுத்து மீது metoo என பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதுவும் கூட ராஜ்நாத்சிங் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்நாத் சிங் வருகை தராவிட்டாலும், குறிப்பிட்ட தேதியில் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றும், வேறு சில சிறப்பு விருந்தினர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வைரமுத்து மீது சின்மயி மட்டுமின்றி அவரை தொடர்ந்து சுமார் 6 பேர் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். இதற்கு வைரமுத்து நேரடியாக பதில் அளிக்கவில்லை


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி