ரஜினிகாந்த்துடன் பிரணவ் நெகிழ்ச்சி
. ரஜினிகாந்த்துடன் பிரணவ் நெகிழ்ச்சி
பிரணவை எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும்
சமீபத்தில் கேரளாவில் பேரிடர் நிவாரண நிதிக்காக, தனது நிவாரண பங்கை முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்துக் கொடுத்து மற்றும் கால்களால் செல்ஃபி எடுத்தாரே அதே பிரணவ்தான். பினராயி விஜயனுடன் அவர் அப்படி எடுத்த செஃல்பி, லெக்ஃபி என்றும் அழைக்கப்பட்டு, நாடு முழுவதும் வைரலானது,
பிறவியிலேயே பிரணவுக்கு கைகள் இல்லை. எனினும், தனது கால்களை பயன்படுத்தி தன்னம்பிக்கையுடன் பல சாதனைகளை படைத்து வருகிறார். படம் வரைவது, போனை ஆபரேட் செய்வது உள்ளிட்ட பல விஷயங்களை அசத்தலாக செய்து வருகிறார்\
இவர் சாதாரண மனிதர்கள் செய்வதைவிடவும், நிறைய வேலைகளை அநாயாசமாக இவர் செய்து வருகிறார். சமீபத்தில் இவர் சச்சின் டெண்டுல்கரையும் சந்தித்தார். பிரணவுக்கு நெடுநாளாக ஒரு ஆசை இருந்தது. அதாவது சூப்பர் ஸ்டார் உள்ள ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான், இவரின் இந்த ஆசை குறித்த தகவலை அறிந்த ரஜினிகாந்த், பிரணவுக்கு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து சென்னை போயஸ் இல்லத்திற்கே வரவழைத்தார் .பினனர் ரஜினிகாந்த்தை பிரணவ் மற்றும் அவருடைய பெற்றோர், ரஜினிகாந்த்தை சந்தித்தனர்.ர் அரை மணி நேரமாக, இந்த சந்திப்பு நிகழ்நதது .. இதன்பிறகு பிரணவ் தனது டிரேட் மார்க் லெக்ஃபி போட்டோவை எடுத்துள்ளார். மேலும், தான் வரைந்த ரஜினிகாந்த் ஓவியத்தையும், பரிசாக வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அவருக்கு செய்வதாக கூறி தனது தொலைபேசி எண்ணையும் பிரணவுக்கு வழங்கினார் ரஜினிகாந்த்
Comments