கேள்வி கேட்கும் குரலை நெரிப்பது அரசு பயங்கரவாதம்.


 

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது:-

 

அதிகாரம் மக்கள் கையில் உள்ளவரைத்தான் ஜனநாயகம். இது தேசவிரோத சக்தியின் வீழ்ச்சிகளின் தொடக்கம். பாகிஸ்தான் இந்துவுக்கு ஒரு நியாயம், இலங்கை இந்துவுக்கு ஒரு நியாயமா? இலங்கை தமிழர்கள் நிலை என்ன?








கிராமங்களில் விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்காமல், மத ரீதியாக மக்களைப் பிரிக்கப்பார்க்கிறது மத்திய அரசு. போராடினால் குரலை நசுக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். பின்னோக்கி செல்லும் பொருளாதாரத்தை சரி செய்யும் நடவடிக்கையை எடுக்காமல் குடியுரிமை சட்டத் திருத்தம் ஏன்?

 

கேள்வி கேட்கும் குரலை நெரிப்பது அரசு பயங்கரவாதம். மாணவர்கள் மீதான அடி என்பது ஜனநாயகத்தின் மீதான அடி.

 

ஜனநாயகத்தை நாம் காத்திட வேண்டும். இதற்கு மாறாக உள்ள மக்களுக்கு எதிரான தனிநாயகத்தை ஒழிக்கும் வரை நான் ஓய மாட்டேன்.

 

தற்போது தேசவிரோத சக்திகளின் வீழ்ச்சியின் துவக்கம் இது.  சர்வாதிகாரத்திற்கு எதிராக சுதந்திர காற்றை சுவாசிக்க ஜனநாயக ஆற்றில் மூழ்கிதான் எழ வேண்டும் என்றார்.

 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,