தமிழ் திரையுலகின் புதிய கதாநாயகன் சரவணன் அருள்

அட்டகாசமாய்த் துவங்கிய சரவணா ஸ்டோர்ஸ் அதிபரின் திரைப்பயணம்



சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருள்


 


, இரட்டை இயக்குனர் களான ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில்  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் 'லெஜெண்ட்' சரவணனின் திரைப்பயணம் அட்டகாசமாய்த் துவங்கியது.


சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருள் முதலில் தங்கள் நிறுவன விளமபரப் படங்களில் நடித்தபோதே அவர் தியுரையுலகில் நடிகராக விரைவில் அறிமுகமாக உள்ளார் என்று பேசப்பட்டது.


முன்பு சரவணன் நடித்த விளம்பர படங்களை இயக்கிய, இரட்டை இயக்குனர் களான ஜேடி-ஜெர்ரி இந்தப் படத்தை  இயக்குகின்றனர். இவர்கள்  விக்ரம், அஜீத் நடித்த உல்லாசம், விக்ரமாதித்யா, ஷெரின் நடித்த விசில் ஆகிய  படங்களை இயக்கியவர்கள் .


இந்தப்படத்தில் சரவணனுக்கு கதாநாயகியாக 'மிஸ் இந்தியா' பட்டம் பெற்ற வட இந்திய மாடல் ஈத்திகா திவாரி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  முக்கிய வேடங்களில் பிரபு மற்றும் விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். 


இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை வேல் ராஜ் கவனித்துக் கொள்கிறார்..


இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை வடபழனி ஏ.வி.எம் ஸ்டூடியோவில் ஞாயிறன்று தொடங்கியது.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,