திருமலையில் தீ


, திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் உள்ள பூந்தி தயாரிக்கும் சமையல் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிப்புக்கு தேவையான பூந்தி, கோயில் அருகில் இருக்கும் பூந்தி தயாரிப்பு கூடத்தில் தயார் செய்யப்பட்டு கன்வேயர் பெல்ட் மூலம் அனுப்பி வைக்கப்படும்.




 


பூந்தி தயாரிக்கும் சமயத்தில் கழிவுகளை தயாரிப்பு கூடத்தின் சுவர் அருகில் கொட்டி வைத்து பின்னர் அவை அங்கிருந்து அப்புறப்படுத்தும். இந்த நிலையில் இன்றும் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பூந்தி தயாரிக்க பயன்படுத்தப்படும் ராட்சத அடுப்புகளில் எரிந்துகொண்டிருந்த தீ அடுப்புக்கும் சுவருக்கும் இடையே கொட்டி வைக்கப்பட்டிருந்த கழிவுகள் மீது பட்டு தீ விபத்து ஏற்பட்டது.


பூந்தி தயாரிப்பு கூடத்தின் மேற்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள புகை போக்கி வழியாக தீ ஜூவாலையுடன் கூடிய புகை பெருமளவில் வெளிப்பட்டதை பார்த்து பக்தர்கள் பதறி அடித்து அப்பகுதியில் இருந்து வெளியேறினர்.


தகவலறிந்து சம்பவ இடத்துக்கு இரண்டு வண்டிகளில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,