மோடி பா ஜா க வு க்கு மட்டும் பிரதமர் இல்லை

மக்கள் முன் மோடி அரசு அடிபணிய வேண்டும்:


*📍மக்கள் போராட்டம் பெருகும்போது அரசு மக்களிடம் அடிபணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.*


*📍மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து ஐந்து நாட்களாக திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து போராட்டங்களை நடத்துவருகிறார்.*


*📍வியாழக்கிழமை நடைபெற்ற நான்காவது நாள் பேரணியில் பங்கேற்ற பின் பேசிய மம்தா, “பாஜகவுக்குத் துணிச்சல் இருந்தால் ஐ.நா. சபை மேற்பார்வையில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.*


*📍அந்த வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தால் ஆட்சியைக் கலைக்க வேண்டும் எனவும் கூறினார். இதனை அந்த மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் மம்தாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.*


*📍பாஜக தரப்பிலும் திரிணாமுல் காங்கிரஸ் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், இன்று “ஐ.நா. முன்னிலையில் நடத்த வேண்டும் என நான் கூறவில்லை. எனது கருத்து திரிக்கப்பட்டுவிட்டது. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றுதான் கூறினேன்.” எனத் தெரிவித்தார்.*


*📍“பிரதமர் நேரடியாகத் தலையிட்டு நாட்டில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். நீங்கள் இந்தியாவின் பிரதமர். பாஜகவுக்கு மட்டும் பிரதமர் இல்லை. தயவுசெய்து உடனே தலையிட்டு பதற்றத்தைப் போக்குங்கள்.” என்றும் மம்தா கூறினார்.* 


*📍“இவ்வளவு பெரிய அளவில் போராட்டம் நிகழும்போது அரசு மக்கள் முன் அடிபணிய வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார். “சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுக்குமே பொறுப்பு உள்ளது. அதனால்தான் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நிராகரிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.*


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,