நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதி


 


உடல்நலக் குறைவு காரணமாக நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதி.

 



                 குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில்  நடந்த மாநாட்டில்  பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாக, பாஜகவினர் போலீசில் புகார் அளித்தனர்.


 


 

          இதனால்  அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலும் பாரதிய ஜனதா கட்சியினர் நெல்லைக் கண்ணன் மீது புகார் தெரிவித்துள்ளனர்.

 

       தற்போது  அவர் , உடல்நலக் குறைவு காரணமாக வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டார்.  இதை தொடர்ந்து மருத்துவமனை முன்  நெல்லை கண்ணனை கண்டித்து  பாஜக மற்றும் இந்து முன்னணியினர் தர்ணா போராட்டம் நடத்தவே  தனியார் மருத்துவமனையில் இருந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நெல்லை கண்ணன் மாற்றப்பட்டார்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி