என்ன வருதோ அதை எடுத்துக்கணும்

 


வலுவிழந்த  மழை 


.. இனி என்ன வருதோ அதை எடுத்துக்கணும் தமிழ்நாடு வெதர்மேன் 


 



.. அடுத்த 3 நாள் மழை உண்டு.. வெதர்மேன் வடகிழக்கு பருவமழை சீசனில் மிகவும் வலுவில்லாத சீசன் டிசம்பர் மாதம் என்பதால் அந்த சீசனில் என்ன கிடைக்கிறதோ அந்த மழையை பெற்றுக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் இந்த வாரமும் இன்னொரு கிழக்கு திசை காற்றால் மழை பெய்து வருகிறது. இன்றைக்கு பார்த்தோமேயானால் ஏராளமான மேகக் கூட்டங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. நிறைய நம்பிக்கை வைக்காதீர்கள்


. குறைந்த அளவு மழை பெய்தாலும் அதை மகிழ்ச்சியாக இருங்கள். குறைந்த அளவில்தான் மழை பெய்யும். ஆனால் கனமழை பெய்யும். மழை இந்த கிழக்கு திசை காற்று முன்புபோல் மிகவும் அதிக கனமழையை கொடுக்காது.


வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர், நவம்பர், டிசம்பர்தான். இந்த 3 மாதங்களில் டிசம்பர் மாதம் வலுவிழந்த சீசன் என்பதால் எந்த அளவுக்கு மழை கிடைக்கிறதோ அதை பெற்று கொள்ளுங்கள்.


நெல்லை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும், அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும். இங்கு மட்டுமல்ல சென்னை டூ நெல்லை கடலோர பகுதிகளிலும் மழை பெய்யும்


. லேசான மழை காலை வேளையில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அங்கும் இங்குமாக லேசான மழை பெய்யும். வாய்ப்பு குறைவு


தென் தமிழகத்தில் நெல்லை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்யும். மேற்கு தமிழகத்தில் மீண்டும் குன்னூர் பகுதிகளில் இன்று காலை கனமழை பெய்தது


ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை பகுதிகள் மற்றும் குன்னூர் பகுதிகளில் கனமழை பெய்ய வேண்டும். வாய்ப்புகள் குறைவுதான். ஆனால் இது நடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,