வைகுண்டஏகாதசிக்கு சிறப்பு பேருந்துகள்

*திருப்பதியில் இருந்து திருமலைக்கு 416 பஸ்கள் இயக்கப்படுகிறது*


திருமலை:


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 6-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 7-ந் தேதி துவாதசி விழா நடக்கிறது. அதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருமலைக்கும், திருப்பதிக்கும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருமலைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.


இது குறித்து ஆந்திர மாநில போக்குவரத்துக்கழக திருப்பதி மண்டல அதிகாரி செங்கல்ரெட்டி கூறியதாவது:-


வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பதியில் இருந்து திருமலைக்கு 2 நிமிடத்துக்கு 1 பஸ் வீதம் மொத்தம் 416 பஸ்கள் 4,402 டிரிப் இயக்கப்பட உள்ளது. அதன் மூலம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு மொத்தம் 3 லட்சம் பக்தர்களை கொண்டு சென்று சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


திருப்பதி மலைப்பாதைகளில் பஸ்களை ஓட்ட திறமையான, பயிற்சி பெற்ற 1,200 சிறப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 6, 7-ந் தேதி ஆகிய 2 நாட்கள் பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு விடுமுறை அளிக்கப்படமாட்டாது என அவர்களுக்கு முன் கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பதியில் உள்ள மத்திய பஸ் நிலையம், ரெயில் நிலையம், லீலா மகால் சர்க்கிள், விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதி, ஏடுகொண்டலு, அலிபிரி பாலாஜி, கபிலத்தீர்த்தம், கருடா சர்க்கிள் ஆகிய இடங்களில் இருந்து திருமலைக்கு பஸ்கள் இயக்கப்படும். சென்னை, பெங்களூரு, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் இருந்து ஆந்திர மாநில அரசு பஸ்கள் இயக்கப்படும்.


கடந்த ஆண்டு 412 பஸ்கள் மூலம் 3,405 டிரிப் இயக்கப்பட்டு, 2 லட்சம் பக்தர்களை திருமலையில் சேர்க்கப்பட்டது.


இந்த ஆண்டு கூடுதலாக 1 லட்சம் பேர் வீதம் மொத்தம் 3 லட்சம் பக்தர்களை திருப்பதியில் இருந்து திருமலைக்குக் கொண்டு சென்று சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,