கர்ப்பம் ஆவதற்கு முன்பே குழந்தைக்கு பெயர் வைக்க முடியாது

கர்ப்பம் ஆவதற்கு முன்பே குழந்தைக்கு பெயர் வைக்க முடியாது. ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி 


                     ரஜினிகாந்த் முதலில் அரசியல் கட்சி தொடங்கட்டும், அதன் பிறகு அவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது பற்றியெல்லாம் பேசுவோம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் 5 நட்சத்திர விடுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவிற்கான துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரி மேற்கண்ட இந்த கருத்தைக் கூறினார்


மேலும், பாலியல் கொடூர நிகழ்வுகள் குறித்து மக்களின் கருத்தை தான் ராகுலும் பிரதிபலித்திருக்கிறார் என்றும், அதனால் அவருடைய கருத்தில் தவறு இல்லை எனவும் கூறியுள்ளார்.


மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா நடைபெறாதா என்ற சூழலில் உள்ளாட்சியை வைத்து நாள்தோறும் கலாட்டா மட்டுமே நடப்பதாக நகைச்சுவைத் தெரிவித்தார். மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தும் செயல்கள் அதிகரித்து வருவதாக வேதனைத் தெரிவித்தார்.


 


ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது பற்றி நடிகை, கர்ப்பம் ஆவதற்கு முன்பே குழந்தைக்கு பெயர் வைக்க முடியாது. அதைப்போல் ரஜினி கட்சி தொடங்குவதற்கு முன்பே அவர் யாருடன் கூட்டணி வைப்பார், எப்படி அரசியல் செய்வார் என்றெல்லாம் தெரிவிக்க முடியாது எனக் கூறினார்.


பாலியல் கொடூரங்கள் அதிகரிப்பது தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்தில் எந்த தவறும் இல்லை என்றும், மக்களின் எண்ணங்களைத் தான் அவர் பிரதிபலித்துள்ளார் எனவும் கூறினார். பிரிவினைவாதத்தை பரப்பும் கூட்டம் இந்தியாவில் இருப்பதாக சாடினார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,