கொல்கத்தாவில் மாபெரும் பேரணி

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்


 

. குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் மாபெரும் பேரணி நடைபெறும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

 குடியுரிமை திருத்த மசோதாவை எந்த சூழ்நிலையிலும் செயல்படுத்த மேற்கு வங்காள அரசு அனுமதிக்காது. சர்ச்சைக்குரிய சட்டத்தை எதிர்த்து மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். நாங்கள் ஒரு போதும் என்.ஆர்.சி. சட்டத்தை அனுமதிக்க மாட்டோம். 

 

குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் நாங்கள் அதனை செயல்படுத்த மாட்டோம்.  பாஜக அல்லாத மாநிலங்களை சட்டத்தை செயல்படுத்துமாறு மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. குடியுரிமை சட்டம் இந்தியாவை பிளவுப்படுத்தும். நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை மாநிலத்தில் ஒரு நபர் கூட நாட்டை விட்டு வெளியேற வேண்டியதில்லை.

 

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,