மனச்சிதைவு

                         மனச்சிதைவு


    தாய் தந்தையின் அன்பில் எந்தவித குறைபாடின்றி வளர்கிறாள் எழில்.எழிலின் தனித்தன்மை எப்போதும் தனிமையை சார்ந்தே உள்ளது.எப்போதும் சந்தோஷத்தை விரும்பாத எழில் நீண்ட நேரம் தனிமையையும் சிறிது நேரம் பெற்றோருடனும் கழிக்கிறாள். ஏழு வயது ஆகும் எழில் தன் வயதுக்கான குறும்போ விளையாட்டோ இப்படி எதிலும் தன் கவனத்தைச் செலுத்த முயற்சிப்பதில்லை.


 


     எழில் எப்போதும் குழப்பத்துடனே தன்னை வைத்துக் கொள்கிறாள்.வீட்டிற்கு உறவினர்களின் வருகை அறிந்தால் ஓடிவந்து அறைக்குள் நுழைந்து கொள்வாள்.பெற்றோர்களிடம் மட்டுமே சிறிதளவு அவள் தன்னை பாதுகாப்பாக உணர்கிறாள் .


 


    திடீரென்று எந்தவித காரணமின்றி அவ்வப்போது அறையின் ஜன்னலைப் பார்த்தவாறு சிரித்து மகிழும் எழிலின் நடவடிக்கைகளைப் பார்த்து பெற்றோருக்கு அதிருப்தியும் பயமும் வருகிறது.எழிலின் தாய் சுசிலா ஆசிரியர் பணியில் உள்ளார்.தந்தைசேகர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.


 


               சுசிலா ஒருநாள் இரவு எழிலுடன் தூங்குவதாக அவள் அறைக்கு செல்கிறார்.ஆரம்பத்தில் மறுக்கும் எழில் பின்னர் ஒத்துக் கொள்கிறாள்.அந்த இரவு தான் எழிலின் உண்மை முகம் தெரியும் என்பதை சுசிலா அறிந்திருக்க வாய்ப்பில்லை.டார்ச் லைட் ஒளியின் உதவியுடன் கண்ணாடி முன் அமர்ந்து அவளது எதிர் பிம்பத்தை பார்த்தே வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறாள் எழில்.


 


          அவளுடைய காதிற்கு மட்டுமே ஏதோ கேட்கிறது போல் உணர்கிறாள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது சுசிலாவினால்.சுசிலாவின் அசைவைக் கவனித்த எழில் மெதுவாக எழுந்து படுத்து விடுகிறாள்.


 


              விடிந்தது...! எழிலும் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றாள்.இரவு நடந்ததை பற்றி நீண்ட நேரமாக சேகருடன் உரையாடும் சுசிலா அழுகையைப் பிடித்துக் கொள்ள சேகரும் இறுக்கமாகி விடுகிறார்.


 


             அன்று மாலை எழிலை அழைத்து வருவதற்கு பள்ளிக்குச் சென்ற சேகர் வழியில் எழிலின் அமைதியைக் கவனித்து பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார்.பதிலென்று அவளிடமிருந்து எதுவும் சரிவர இல்லை.குழப்பமான பேச்சும் தெளிவில்லாத மனநிலை மட்டுமே இருந்தது.எழிலின் அப்பாவால் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது பேச்சையும் குறைத்து கொண்டார்.வீடு வந்தடைந்தனர்.


 


           தற்செயலாக வந்திருந்த சுசிலாவின் தோழி அமரந்திருப்பதை கவனித்த எழிலும் சேகரும் சேகர் வாங்க என்று சொல்லிக் கொண்டே உள் நுழைய எழில் வேக வேகமாக அறையினுள் நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்டாள்.


                  மூவரும் பேசிக் கொண்டிருக்கவே சுசிலாவின் தோழி சுமதியின் கவனம் முழுதும் பூட்டிய அறை திறக்கப்படுமா அவள் ஏன் வீட்டிற்கு வந்தவர்களின் முகத்தைக் கூட பார்க்க விருப்பப்படவில்லை என்பதைப் பற்றி தான்.சுமதி ஒரு மனநல மருத்துவர் என்பதால் அதிகமான கவனம் எழில் மீது இருந்திருக்கலாம்.


           தண்ணீர் குடிக்க வந்த எழிலை சுசிலா அழைத்து அறிமுகப்படுத்துகிறார் சுமதியிடம்.ஏதோ சிந்தனையில் இருப்பதை அறிந்த சுமதி எழிலை அமரச் சொல்கிறார்.அவளும் அமர்கிறாள்.சுமதி பேசத் தொடங்கி நிறைய நேரங்கள் ஆகியும் எழில் பதில் சொல்ல விருப்பம் இல்லாதது போல் மேலேயும் கீழேயும் பார்த்துக் கொண்டிருக்க சட்டென்று எழுந்து அறைக்குள் செல்கிறாள்.சுமதியும் விடை பெறுகிறார்.


         அன்று இரவு சேகர் மாலை நடந்ததை பற்றி கூறுகிறார் சுசிலாவிடம்..!


 


              மறுநாள் சுமதியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது சுசிலாவிற்கு.எடுத்தவுடனே உன் மகளுக்கு எதுவும் பிரச்சினையா என்று கேட்க தேக்கி வைத்த கவலைக்கு விடிவு கிடைத்ததாகவே எண்ணி விடுகிறார் சுசிலா அத்தனையும் ஒன்றுவிடாமல் ஒப்பித்து விடுக்கிறார் சுமதியிடம்.


 


எதிர்பார்க்காத ஒற்றை வார்த்தை இதுவாகவே இருந்தது சுமதியிடமிருந்து 'எழிலை என்னுடைய மருத்துவமனைக்கு அழைத்திட்டு வா' என்று.


        சுசிலாவும் சேகரும் பேசி யோசித்து முடிவு எடுக்கிறார்கள்/ மறுநாள் எழிலை அழைத்துச் செல்கிறார்கள்.மூவரும் சுமதியின் அறைக்குள் நுழையவே /எழிலிடம் தனியாக பேச வேண்டும் நீங்கள் வெளியில் காத்திருங்கள் /என்கிறார் சுமதி.


            சுமதி எழிலிடம் சில கேள்விகளை கேட்டு கொண்டே அவளைப் பற்றி தெரிந்து கொள்கிறார்.அப்படியாகவே நேரத்தை பார்த்து அவர்கள் இருவரையும் உள்ளே வர சொல்கிறார். அருகிலிருந்த நர்ஸ் ஒருவரிடம் எழிலை அழைத்துச் சென்று சாப்பிட வைத்து கூப்பிட்டு வருமாறு சொல்கிறார்.


             என்ன பிரச்சினை' என்று கேட்க முன்வரும் சேகர் சுசிலாவிடம் சுமதி கேள்விகளை எழுப்புகிறார்'.அதிக நேரம் தனிமையில் இருப்பாளா,இரவு தூங்க மாட்டாளா,சாப்பாடு சாப்பிட மாட்டாளா எழில்.'.!"ஆமாம்"என்று மட்டுமே மெல்லிய குரலில் பயத்துடன் வெளிப்படுகிறது.


          ' ஹீம் இதற்குப் பெயர் மனச்சிதைவு(schizophrenia).நோய் .பாதிப்பட்டவர்களின் எண்ணம் செயல் உணர்வு இவை மூன்றையும்  க்கும்.டோபமைன்,செரோடோனின் ரசாயனங்கள் உடலில் அதிகமாக சுரப்பதால் இந்நோய் ஏற்படுகிறது.அதனால் தான் தானாக பேசுதல், தனிமையை நாடுதல், தெளிவில்லாத மனநிலை, பாதுகாப்பின்மை,தன்னைச் சுற்றி ஏதோ இருப்பது போல் உணர்தல்,காதில் எவரோ பேசுவது போல், தூக்கமின்மை, பசியின்மை,சதி நடக்கிறது தன்னைச் சுற்றி, கொலைமிரட்டல் இப்படியான அறிகுறிகள் இருக்கும்' என்கிறார் சுமதி.


            'கவலைப்படாதீங்க எழிலுக்கு ஆரம்பம் என்பதால் குணப்படுத்தி விடலாம்.கொடுக்கப்படும் மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படலாம்.பாதிப்பு இருக்காது.சரியாகிவிடும்.இடையில் மருந்தை நிறுத்தி விடுவது பக்குவிளைவுகளுக்கு பயந்து நிறுத்துவது மாதிரி இருந்தால் நோய் குணமடையாது மீண்டும் பின் தொடரும்...!மருந்தை சரிவர கொடுங்கள்' என்கிறார் சுமதி...!


          நன்றியை தெரிவித்து மூவரும் நகர்கிறார்கள்...


(பி.கு. பெற்றோர்களே குழந்தைகள் அதிகமாக தனிமை நாடுதல், பசியின்மை, தூக்கமின்மையை இவ்வாறு இருந்தால் உடனடியாக குழந்தைகள் மீது உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.ஒவ்வொரு குழந்தையும் பொக்கிஷம்.)


 - கீர்த்தனா


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,