பாப்கார்ன் இணையில்லா வேடிக்கை தோழன்

           ஐனவரி 19 இன்று வேடிக்கை விடுமுறை நாள்.


உலக பாப்கார்ன் தினமும் கூட


       பாப்கார்ன் நாள். யானை பசிக்கு சோளப்பொறியா என்பார்கள்


                 . ஆனால் இந்த (சோளப்பொறி )பாப்கார்ன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஓர் சிற்றுண்டி உணவாக இன்று வரை உள்ளது


              . பாப்கார்ன் வரலாறு: பாப நீண்ட மற்றும் மாறுபட்ட வரலாறு கொண்டுள்ளது


                 இந்த பாப்கார்ன். கி.மு5000 ஆம் ஆண்டில் சோளம் பயிரிடப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் நம்புகிறார்கள். பெரு நாட்டில் தான் முதன் முதலாக பாப்கார்ன் தயாரிக்கப்பட்ட ஒரு கைப்பிடி கொண்ட பாத்திரம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.                   அந்த பாத்திரம் கி.பி400 ஆண்டுகளுக்கு முந்தைய து என ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்துள்ளனர். பாப்கார்ன் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தின் அதிகார பூர்வ சிற்றுண்டியாகும்.


                தியேட்டர்களின் சிற்றுண்டி: முத்துக்கள்: 1900 களின் முன் அமெரிக்காவில் பாப்கார்ன் மிக பிரபலமாக இருந்துள்ளது. அங்கு முத்துக்கள் என்ற பெயரில் தெரு மூலைகளில் விற்கப்பட்டுள்ளது. பிறகு தியேட்டர்களில் இடைவேளை யின் போது அனைவரும் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டிகளில் முதலிடத்தை பாப்கார்ன் வகித்து வருகிறது


.


                  திரைப்பட அனுபவத்தின் மிகப்பெரிய பகுதியாகும். வி.சி.ஆர்கள்: இதனிடையே வி.சி.ஆர்கள் பிரபலமடைந்து மக்கள் வீட்டிலேயே படங்களை பார்க்க தொடங்கிய போது பாப்கார்ன் விற்பனை குறைந்தது.


                  மைக்ரோவேவ் கண்டுபிடிப்புகள்: மைக்ரோவேவ் ஓவனில் சுலபமாக வீட்டிலேயே தயாரிக்கும் கண்டுபிடிப்புகள் வந்த போது பாப்கார்ன் விற்பனை அதிகரிக்க தொடங்கியது. பெரும்பாலும் பாப்கார்ன் அலங்காரத்திற்கும் பேக்கேஜிங் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. பூர்வீக கலாச்சாரங்களில், சோளம் மற்றும் பாப்கார்ன் ஆகியவை மத நோக்கங்களுக்காகவும் அலங்காரங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டன.


 


 ---மஞ்சுளா யுகேஷ்


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி