பிரியாவிடை

வருடம் முழுவதும் திருநாளே.. 


பிரியாவிடை ?



              அதுவும் இந்த பிரியாவிடை நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது..


ஏன் இவ்வளவு பிரசித்தி என்றால் அதற்கான விடை இந்த உற்சவத்தில் கலந்து கொள்ளும் பொழுது நமக்கே தெரிய வருகிறது..


ஆம்.. ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அந்த அரங்கனை திருமணம் செய்ய மேற்கொள்ளபட்ட நோன்பே நீராட்டு உற்சவம் என்னும் மார்கழி நோன்பு..


சரி.. அதென்ன பிரியாவிடை ?


பிரியாவிடை அன்று ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருமாளிகையில் இருந்து புறப்பட்டு கோபுரவாசல் வழியாக ஸ்ரீ வடபத்ரசயனர் சன்னதிக்கு எழுந்தருளுகிறாள்..


அன்றைய தினம் மட்டும் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ வடபத்ரசயனர் மூலஸ்தானத்தில் எழுந்தருளும் சமயம்  பெரியபெருமாள், தாயார்  உற்சவர்கள் மூலஸ்தானத்தை விட்டு வெளியில் எழுந்தருளுகின்றனர்..


நாச்சியார் திருமாளிகையில் இருந்து வடபத்ரசயனர் சன்னதிக்கு வீதி வழியாக எழுந்தருளல்


         தாயார் வடபத்ரசயனரிடம் நான் முறைப்படி நோன்பு மேற்கொள்ள இருக்கிறேன் எனக்கு அனுமதி தாருங்கள் என கேட்கிறாள்..


இதை தொடர்ந்து அரையர் சேவை நடக்கிறது.. 


இந்த பிரியாவிடை உற்சவத்தின் பொழுது ஸ்ரீ ஆண்டாளின் முக பாவனைகள் அழகாய் மாறுவது காண்போரை வியக்க வைக்கிறது..


திருக்கோவிலை விட்டு புறப்படும் பொழுதும், வடபத்ரசயனர் சன்னதியை அடைந்த பின்பும், மீண்டும் நாச்சியார் திருமாளிகை அடையும் பொழுதும் குழுமியிருக்கும் பக்தர்கள் உணர்வதாய் சொல்கின்றனர்..


வடபத்ரசயனர் சன்னதியை வத்தடைந்தபின்


பிரியாவிடை உற்சவம் ஆகிய மறு தினம் முதல் ஸ்ரீ ஆண்டாள் நோன்பு நோற்கிறாள்.. அதாவது எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெற துவங்குகிறது..


நியமனம் கேட்ட பின்


    தினமும் கோபுர வாசலில் மாலே மணிவண்ணா என பாசுரம் பாடி ஸ்ரீ வில்லிபுத்தூரையே பிருந்தாவனமாகவும், வடபத்ரசயனர் சன்னதியே நந்தகோபர் திருமாளிகையாகவும், வடபத்ரசயனர் பெருமாளையே கண்ணனாகவும், அங்குள்ள திருமுக்குளத்தையே யமுனை நதியாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் வாழ் மக்களையே கோபிகையாகவும் கற்பனை செய்து கொண்டு எண்ணெய் காப்பு உற்சவத்திற்காக திருமுக்குளத்திற்கு எழுந்தருளுகிறாள்..


எண்ணெய் காப்பு மண்டபத்தில் சர்வாபரண பூஷிதையாய்.


அங்கு சர்வாபரண பூஷிதையாக ஜொலிக்கிறாள்.. முறைப்படி நீராட்ட உற்சவம் முடிந்து மீண்டும் வடபத்ரசயனர் சன்னதியில் உள்ள தன் திருத்தகப்பனார்  பெரியாழ்வாரிடம் தான் நோன்பு மேற்கொண்ட விவரத்தை ஒரு குழந்தை தன் தந்தையிடம் சொல்லும் பாவத்துடன் சொல்லி விட்டு செல்கிறாள்..


எண்ணெய் காப்பு முடிந்து திருமஞ்சனம் எனப்படும் நீராட்ட உற்சவத்திற்கு புறப்படும் பொழுது


 



ரங்கி நாற்காலியில் ராணியாய் வருகிறாள்.. தன் தந்தை பெரியாழ்வாரிடம் தான் நோன்பு மேற்கொண்ட விவரத்தை கூற..


 


இந்த அழகிய நிகழ்வு ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்தமானது..


 


------ஜெயந்தி சதீஷ் (ஸ்ரீவில்லிபுத்தூர்)


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,