'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி

'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி


மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் ஓவிய கலைஞர் தமிழரசி நடராஜன் ஏற்பாட்டில், 'கோல்டன்ஸ்ட்ரீக்' 2020 ஓவிய கண்காட்சி KL City art gallery -ல் 8 நாட்கள் நடைபெற உள்ளது.




      முதல் முதலில் கண்காட்சி கடந்த 2018-ஆம் ஆண்டில் கே.எல். இந்திய கலாச்சார மையத்தில் முதன்முறையாக 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் கண்காட்சி நடைபெற்றது. தற்போது 2020-ஆம்ஆண்டில்,இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் 58 இளம் கலைஞர்களின் படைப்புகள் மற்றும் முன்னணி ஓவிய கலைஞர் தமிழரசியின் படைப்புகள் இடம்பெறவுள்ளன.



கோல்டன்ஸ்ட்ரீக் 2020 ஓவிய கண்காட்சிகோலாலம்பூர், Off Jalan syed putra, Lorong kapar, Wisma YPR -ல் அமைந்துள்ள KL City art gallery -ல் ஜனவரி 18 சனிக்கிழமை மாலை 7 மணி முதல் ஜனவரி 26 -ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறும் கண்காட்சியை முன்னணி ஓவிய கலைஞர் எஸ்கே பிரகாஷ் துவக்கி வைத்தார்.


         ஐம்பதிற்கும் மேற்பட்ட ஓவியர்களின் படைப்புகளில் உருவான நூற்றுக்கும் மேற்பட்ட மனதை மயக்கும் அழகிய ஓவியங்களின் அணிவகுப்பில் இக்கண்காட்சி,பார்க்கும் அனைவரும் வியக்கும் விதத்திலும்,அவர்களது மனதை மயக்கும் வகையிலும் பிரம்மாண்டமான கண்காட்சியாக அமைந்துள்ளது


...இக்கண்காட்சி மாணவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களது திறமைகளை வெளிக்கொணரவும் ஒரு சிறந்த தளமாக அமையவும் ஏற்றபடி அமைக்கப்பட்டுள்ளது.


தமிழரசி நடராஜனை பற்றி


 தமிழகத்தின் ஈரோடு பகுதியைச் சார்ந்த ஓவிய கலைஞர் தமிழரசி நடராஜன் ,சிறுவயது முதலே வற்றாத ஓவிய ஆர்வம் கொண்டவர்...தான் கற்றுத்தேர்ந்த பல்வேறு ஓவிய நுட்பங்களை பயிற்றுவிக்க மற்றும் ஓவிய ஆர்வலர்களை ஒன்றிணைக்க கோலாலம்பூரில் 'தம்ஸி ஆர்ட்' (TamsiArt Sdn. Bhd) என்ற ஓவிய பள்ளியை பதிவுசெய்து துவக்கி நடத்திவருகிறார்.



        இளங்கலை பொறியியல் பட்டதாரியான இவர் 2008 வரை 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.டி துறையில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.



            ஓவியங்களை கற்றுக்கொள்வதற்கும் பல்வேறு நுட்பங்களை பரிசோதிப்பதற்கும் ஆர்வம் கொண்டவர் , இந்திய பரபரிய கலைகள் மீது மிகுந்த ஆர்வம்கொண்டவர், சிக்கலான பல ஓவிய முறைகளை கற்று தேர்ந்தது மட்டுமின்றி  கலை ஊடகம், வடிவம் மற்றும் வண்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் சோதனை செய்துள்ளார்


      பாரம்பரிய கலை வடிவத்தின் சாரத்தை பாதுகாப்பது மிக முக்கியம் என சொல்லும அவர் தன்  கலைப் படைப்புகளுக்குப் பின்னால் அவையே  அடிப்படைக் கொள்கை என்கிறார்


. பாரம்பரிய கலையான தஞ்சாவூர் ஓவியத்தின் மீதான அளவுகடந்த பற்றுடைய இவர்,12 வருடத்திற்கும் மேலாக ஓவியம் பயிற்றுவித்து வருகிறார்.


'
தம்ஸி ஆர்ட்' (TamsiArt Sdn. Bhd)


 இங்கு இந்திய பாரம்பரிய கலை ஓவிய முறைகளான தஞ்சாவூர் ஓவியம், மைசூர் ஓவியம், கேரள சுவரோவியம், 3 டி மியூரல், ஆயில் பெய்ன்டிங் மற்றும் பென்சில் ஸ்கெட்சிங், மார்ப்பில் ஓவியம், வாட்டர்கலர்கள், வர்லி ஆர்ட், லிப்பன் ஆர்ட் போன்ற முக்கிய கலை வடிவங்கள் மற்றும் நுட்பங்கள் ஒரே கூரையின் கீழ் ஓவியத்தில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றது.


        இப்பள்ளியில் 8 வயது சிறுவர் முதல் 70 வயது பெரியவர்கள் வரை ஓவிய ஆர்வலர்கள் முறையாக பயிற்சிபெற்று வருகின்றனர். இதுவரை இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சிபெற்றுள்ளனர். மாணவர்கள் தீட்டிய ஓவியத் தொகுப்பை www.tamsiart.com என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ற ஓவியங்கள் வரைந்து வழங்கும் சேவையும் செய்துவருகின்றனர்.

இதுபோன்று ஓவிய கலை பயிற்சிகள் இளம் ஒவிய மாணவ மாணவியர்களின் ஆரவத்தை மற்றும ஊக்கத்தை வளர்க்கும மற்றும் அவர்களது  செயலாற்றும் திறனை அதிகரிக்கு செய்யும்


மேலும அவர்களது  கற்பனை மற்றும் படைப்பாற்றலையும் அதிகரிக்கும் என்பது உறுதி.
இந்த  கண்காட்சி விபரங்களுக்கு 016-6460774 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,