இனி விண்டோஸ் 10தான்
*மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 என்ற ஆப்ரேட்டிங் சிஸ்டம் மென்பொருள் வரும் 14 ஆம் தேதிக்கு பிறகு செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.*
மைக்ரோ சாப்ட் நிறுவனத்தால் கடந்த 2015ஆம் ஆண்டு விண்டோஸ் 10 ஓஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பயன்படுத்த எளிதாக இல்லை என்பதால் பலர் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், விண்டோஸ் 10 மென்பொருளை பயனர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக மைக்ரோ சாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 பயன்பாட்டை தடை செய்ய முடிவெடுத்துள்ளது.
அதன்படி, வரும் 14 ஆம் தேதிக்கு பிறகு விண்டோஸ் 7 மென்பொருள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விண்டோஸ் 7 வெர்ஷன் மென்பொருளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விண்டோஸ் 10 மென்பொருளை இணையத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
Comments