பட்டாஸ் ஒரு நாள் முன்னதாக ரிலீஸ்
தர்பார் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது.படம் வெளியான அன்றே சில மணிநேரங்களில் இணையத்தில் சட்டவிரோதமாக தர்பார் படம் வெளியாகியது .
அம்மா கிரியேஷன்ஸ் சிவா மற்றும் கே.ராஜன் ஆகியோர் காவல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று புகார் கொடுத்தனர்.திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது இவ்வாறு வாட்ஸ் அப்பில் பகிர்வதைத் தடுக்க வேண்டும் என்றும், தர்பார் படத்தை பகிர்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிவா, கே.ராஜன் ஆகியோர் பேசுகையில், தர்பார் படத்தைச் சட்டவிரோதமாக வாட்ஸ் அப்பில் பார்ப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் உத்தரவாதம் அளித்துள்ளதாகக் கூறினர்.மேலும், வாட்ஸ் அப்பில் பகிர்பவர்களை சைபர் க்ரைம் பிரிவினர் ட்ராக் செய்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
தர்பார் வசூல் படுமோசமானதைத் தொடர்ந்து தனுஷ் 16ம் தேதி ரிலீஸ் செய்வதாக இருந்த தன்னுடைய ‘பட்டாஸ்’படத்தை ஒருநாள் முன்னதாக 15ம் தேதியே ரிலீஸ் செய்கிறார்.
-ருத்ரா
Comments