ரஜினி அனிருத்துக்கு கண்டனம்


ரஜினி, அனிருத்துக்கு எதிராக திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தர்பார் படத்திற்கு 450க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இதில் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் இருந்து 5 பேருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. சங்கத்தில் இருக்கும் இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு தராததால் அனிருத்துக்கு இசையமைப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

 இது குறித்து திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீனா கூறும்போது, பேட்ட படத்தின் போதே இசையமைப்பாளர் அனிருத்திடம் சங்கத்தில் இருக்கும் இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறினேன். அவர் சம்மதம் தெரிவித்துவிட்டு, அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்று கூறினார். ஆனால், தர்பார் படத்தின் போது சங்க கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தரவில்லை. மேலும் இந்த விஷயம் ரஜினி அவர்களுக்கும் தெரியும். இதனால், ரஜினி மற்றும் அனிருத்துக்கு திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் சார்பாக கண்டனத்தை தெரிவிக்கிறோம்' என்றார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,