விஜய்யின் சர்கார் மற்றும் 2.0 படங்களின் முதல் நாள் வசூலை முறியடிக்கமுடியாத தர்பார்

                              சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் நேற்று9.01.2020 வெளியானது. தர்பார் படத்தின்        முதல் நாள் வசூல் விஜய்யின் சர்கார் மற்றும் 2.0 படங்களின் முதல் நாள் வசூலை முறியடிக்கவில்லை என்ற பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்கள் தெரிவிக்கின்றன.


லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ஸ்ரீமன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் தர்பார் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியான தர்பார் படத்திற்கு பெரிய படங்கள் ஏதும் போட்டியாக ரிலீஸ் ஆகவில்லை.


                    தர்பார் படத்திற்கு  முதல் பாதி சூப்பராக இருப்பதாகவும், இரண்டாம் பாதி சுமாராக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால், மேலும், தர்பார் படத்தின் வசூல் பாதிக்கும் என கணிக்கப்படுகிறது.

         ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் செய்த சாதனையை தர்பார் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்கார் வசூல் சாதனையை தர்பார் முறியடிக்கவில்லையாம். சென்னையில் சர்கார் முதல் நாள் வசூலாக 2.37 கோடியை வசூல் செய்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படம் சென்னையில் முதல் நாளில் 2.64 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.

படத்தின் திரைக்கதை சொதப்பலும், ஆர்ப்பாட்டம் இல்லாத ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் செய்த சாதனையை தர்பார் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்கார் வசூல் சாதனையை தர்பார் முறியடிக்கவில்லையாம். சென்னையில் சர்கார் முதல் நாள் வசூலாக 2.37 கோடியை வசூல் செய்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படம் சென்னையில் முதல் நாளில் 2.64 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.

     திரைக்கதை சொதப்பலும், வலுவான சம்பவங்களும் இல்லாத படமாகவும் இருப்பதாலும் ,நயன்தாராவின் வயதான தோற்றமும், சோப்ளாங்கி இந்தி வில்லன்களும் ,மனதை கவராத பாடல்களும் , இரைச்சான இசையும் படத்தை தோல்வியுறசெய்துவிட்டன என தியேட்டர் அதிபர்கள் நொந்து போய் உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கிறது


    80 தில் வர வேண்டிய படம் என பல ரசிகர்கள் சொல்வதாகவும் பல  யு டியூப் விமர்சனங்கள் வேறு  படத்தின் வசூலை பாதித்துளளது


.........ருத்ரா


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி