வேடிக்கை விடுமுறை - ஜனவரி 23 என்பது கையெழுத்து நாள்


வேடிக்கை விடுமுறை :

கையெழுத்து நாள்:

ஜனவரி 23 என்பது கையெழுத்து நாள்

 


கையெழுத்து பற்றி நான் படித்து அறிந்த தகவல்கள் இதோ உங்களுக்காக.               கையெழுத்து அழகாக இருந்தால் தலையெழுத்தும் அழகாக
இருக்கும் என்பர்.

சிலர் தங்கள் பயன்படுத்தும் வகை பேனாவில் மட்டுமே அவர்கள் கையெழுத்து அழகாகவும் சரியாக வும் இருக்கும் என அதையே பயன்படுத்துவார்கள்.தங்களது பேனாவை மட்டுமே எப்போதும் பயன்படுத்துவார்கள்.

சிலர் அவர்கள் பயன்படுத்தும் பேனாவை யாருக்கும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இன்று எல்லாம் கணினி மயமாகியதால் எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது.

கையெழுத்து ஒருவருக்கு ஒருவர் வேறுபட்டு இருக்கும்.

தனிதன்மை:

ஒருவர் எப்படிப்பட்டவர் ஆணா பெண்ணா என்பதை கையெழுத்தை வைத்தே கண்டறியலாம் என தடவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பேனா அல்லது பென்சில் மற்றும் காகிதத்தில் உங்கள் கையெழுத்தின் நேர்த்தியான கலையை பயிற்சி செய்து புதுப்பிக்கவும்.💐

அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட முதல் நபரான ஜான் ஹான்காக்கின் பிறந்த நாளை நினைவுகூர்கிறது.


கையெழுத்து என்பது பேனா, பென்சில் அல்லது தூரிகை போன்ற ஒரு கருவியைப் பயன்படுத்தி கையால் எழுதும் செயல்.

தனித்துவமானது:

ஒரு நபரின் கையெழுத்து அவரது கைரேகையைப் போலவே தனித்துவமானது என்று கருதப்படுகிறது - இரண்டு பேருக்கும் ஒரே எழுத்து நடை அல்லது கையெழுத்து இல்லை. இதன் காரணமாக, ஆவணங்களின் நம்பகத்தன்மையை சோதிக்க பல தடயவியல் நிபுணர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்களால் கையெழுத்து பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

கொண்டாடுவது எப்படி?

ஒரு பேனாவை எடுத்து ஒரு நண்பர் மற்றும் குடும்ப உறுப்பினருக்கு ஒரு குறிப்பை எழுதுங்கள்.
எதையும் எழுத கணினியைப் பயன்படுத்த வேண்டாம் என்று தீர்மானியுங்கள் - நீங்கள் எங்கு சென்றாலும் ஒரு நோட்பேடையும் பேனாவையும் எடுத்துச் செல்லுங்கள், நீங்கள் எதையும் எழுத வேண்டிய போதெல்லாம் அவற்றைப் பயன்படுத்துங்கள்.

குழந்தைகளுக்கு வண்ண பென்சில் மற்றும் பேனாவை அன்பளிப்பாக கொடுத்து பாருங்கள். அவர்கள் எழுதியும் படம் வரைந்து வண்ணம் தீட்டியும் மகிழ்வார்கள்.

கையெழுத்து தினமான இன்று பிள்ளைகளுக்கு எழுதும் பழக்கத்தை அதிகரிக்க செய்வதன் மூலம் அவர்கள் பரீட்சையில் அதீக மதிப்பெண்கள் எடுக்க உதவும் .

  

-----மஞ்சுளாயுகேஷ்


 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,