இது அனன்யா பக்கம் -- 3 தூக்கம் என் கண்களை தழுவட்டுமே...

           


இது அனன்யா பக்கம்


 


சிரிக்க சிரிக்க மட்டும்,,,,


தூக்கம் என் கண்களை தழுவட்டுமே...


 


 பகுதி  (3 )


தூக்கம் என் கண்களை தழுவட்டுமே அதிகாலை சீக்கிரம் எழுந்திருக்கறதால பல பயன்கள் இருந்தாலும் சில கஷ்டங்களும் இருக்கத்தான் செய்யுது. அதில் முதன்மையானது என்னன்னா, பன்னெண்டு மணி நேரத்துல மூளை ஆட்டோ ஷட்டவுன் ஆகிடும். அப்படியே கண்களும். அதுனால நேரா ஆஃபீஸ் பஸ்ல ஏறிண்டு சீட்டுல உக்காந்த அடுத்த நிமிஷம் ஐடி கார்ட் டேக்கை உள்ளே வைச்சுட்டு, மொபைல், பாட்டு எதுவும் வைச்சுக்காம பப்பரக்கான்னு தூங்கிட வேண்டீது.


           சமீபத்துல யாரு கண்ணு பட்டதோ தெரியலை கரெக்டா எனக்கு பின்சீட்டுல ரெண்டு வாண்டுப்பையன்கள் வந்து உக்காந்து பிராணனை வாங்கறாங்க சவுண்டு சிஸ்டம் கூட தோர்த்துப்போய்டும் போல்ருக்கு. அப்பிடி ஒரு சத்தம்.


         அன்னைக்கு அப்படித்தான் ஸ்வர்க்கமா ஏஸி வெண்ட்லேந்து காத்து கொட்றது, தூங்கலாம்ன்னா சதி லீலாவதி சக்திவேல் மாதிரி ஒரு பையன் பின்னாடி இருக்கற பையன் கிட்ட வெட்டித்தனமா அப்பறம் அப்பறம்ன்னு பேசிண்டு இருக்கான். நானும் நாகரீகமா இதுவும் கடந்து போகும்ன்னு சும்மாத்தான் இருந்தேன்


             . ஆனா அலறல் ஓவரா ஆயிடுத்தா, (டாப்பிக் வேற க்ரிக்கெட்) சரின்னு மெதுவா திரும்பி, Excuseme, could you please talk softer?ன்னு கேட்டுட்டேன். அப்பிடி அஸெர்ட்டிவ்வா இருக்கேனாம். I should practice what I preach இல்லையா? உடனே வால்ப்பசங்க ஓக்கேன்னு சொல்லிட்டு சீட்டுக்கு பின்னாடி என் காது கிட்ட வந்து, vocal chordஐ mute பண்ணிட்டு, கேக்குதா, கேக்குதான்னு கிசுகிசுக்கறாங்க. (ரோல்லிங் ஐஸ்) குறிப்பா கவனிச்சு பார்த்தப்போ 95% ME படிச்ச மேதாவிங்களுக்கு சுத்தமா அடிப்படை நாகரீகம் தெரியலை.


                   ஏன் இயர் ஃபோன்ஸ் இல்லாம வாட்ஸப் ஸ்டேட்டஸ் பார்க்கறோம்? ஏன் காட்டுக்கூய்ச்சல் போட்டுண்டு பப்ளிக் இடங்களில் ஃபோன் பேசறோம்? பஸ்ல எல்லோரும் தூங்கறாங்களே, நாம கத்தினா உபத்திரவமா இருக்குமேங்கற துளி டீஸென்ஸி இருந்தா இதெல்லாம் செய்வோமா? இதுல கிண்டல் வேற. அடுத்தவங்க எப்படி போனா நமக்கென்னங்கற ஆட்டிட்யூட் இருக்கற ஆட்களை பார்த்தாலே எனக்கு குமட்டல்


                . எனிவே.. இப்போ விஷயத்துக்கு வர்றேன். ஆஃபீஸ் பஸ்ல கிடைக்கும் என் முக்கால் மணி தூக்கத்தை எப்போவும் தியாகம் செய்ய நான் விரும்பறதில்லை.Whatever it takes! பஸ் ஸ்பீக்கரில் சில சமயம் அமைதியான அழகான சங்கீதம் கேட்கும். பல தடவை நாக்கமுக்கா டைப் பாட்டுக்கள் தான். இன்னும் சில சமயம் டுர்ர்ர்ர்ர்புர்ர்ர்ர்ர்ன்னு இரைச்சல் மட்டும் வரும். ஸ்பீக்கர் ரிப்பேராம். ட்ரைவர் என்னமோ நாங்களெல்லாம் பீதோவன் குடும்பம்ன்னு நினைச்சுண்டு இது எதுவுமே தெரியாம பஸ்ஸை ஓட்டிண்டே டிஜே வேலை பார்த்துண்டு இருப்பார்


                    . ஆச்சா.. அடுத்தது எல்லாரும் தூங்கறச்சே அப்ராட் கால்ஸ் பேசும் மக்கள். முன்னெல்லாம் தான் உரக்க பேச வேண்டிருக்கும். ஏன்னா கேட்காது. இப்பென்ன? கத்து கத்துன்னு கத்த வேண்டீது. ஒரு நாள் வெளீல ஒரு வேலை இருந்ததுனால எனக்கு வழக்கமா இறங்கற ஸ்டாப்பு லேந்து கொஞ்சம் முன்னாடி போய் இறங்கணும். ஹப்பாடா முக்கால் மணி இல்லை, இன்னைக்கு ஒரு மணி நேரம் தூங்கலாம்ன்னு மனசுக்குள்ளே ஒரே சந்தோஷம். எந்த துஷ்ட சக்தியும் இன்னைக்கு என்ன எதுவும் செஞ்சுடாதுன்னு நம்பினேன். ப்ரார்த்தனையும் பண்ணிண்டேன்.


                     அன்னைக்கு மேற்கண்ட அத்தனை சோதனையும் வந்துடுத்து. தூக்கம் சொக்குது. பஸ்ல அனேகர் ஒரே கத்தல். பின்னாடி இருக்கற பையன் வாயே மூட மாட்டேங்கறான். நல்ல வேளை அவன் கூட உக்காந்திருந்த பையன் பெரும்பாக்கத்துல இறங்கிடுத்து. டாக்கிங் டாமுக்கு கம்பெனி இல்லாம போய்டுத்து. வேற வழியே இல்லாம பாட்டை காதுல வைச்சுண்டுட்டான். நான் சாமியாட ஆரம்பிச்சேன். டபுள் சீட்டுல அனந்த பத்மனாபஸ்வாமி மாதிரி தூக்கத்துல இப்படியும் அப்படியும் ஆடிண்டே இருக்கேன். வாய்ல நயகரா மாதிரி வாட்டர்ஃபால்ஸ் கொட்டறது. அப்பப்போ பயத்துல துளியூண்டு திறந்து கர்ட்டனை விலக்கிட்டு வெளீல பார்த்துண்டேன்


 


                         . இப்போத்தான் நைக்கி வந்திருக்கு, இப்பத்தான் கோ கலர்ஸா? இப்போத்தான் பரந்தாமா ஆப்டிக்ஸா ஓக்கே ஓக்கேன்னு தூக்கமான தூக்கம். ஒரு கட்டத்துல டாம் & ஜெர்ரி டாம் மாதிரி தூங்கிண்டே ஃப்ளூயிட் ஸ்டேட்ல சீட்லேந்து அப்படியே உருகி ஓடிட்டேன். ஸ்வர்க்கபுரியில் புகை மண்டலம். தெய்வீக இசை வரவேற்க ஒரே வாசனையான பூக்கள் தூவி வைச்சிருக்கு. யாரோ ஒரு லேடி வந்து பன்னீர்லாம் எம்மேல தெளிக்கறா.. எல்லாம் ஒரே ஜில் ஜில் கூல் கூல்.


                       இதான் ஸ்வர்க்கமா? அடேங்கப்பா.. செட்டு போட்ருப்பாங்களோ? எங்கேயோ இதெல்லாம் பார்த்தாப்புல இருக்குல்ல? ஏதோ ரஜினி படம்? ஆங்.. அதிசியப்பிறவி? மைண்ட்வாய்ஸின் ஆதிக்கம் கனவிலுமா? நான்ஸென்ஸ் ப்ளடி பிட்பாக்கேட்! பஸ்ஸின் தாலாட்டும்.. ஸ்வர்க்கபுரியின் டிக்கெட் கவுண்டரும் .. ஆஹா.


                    . எக்ஸ்க்யூஸ்மி.. எக்ஸ்க்யூஸ்மி.. ஹான்? யாரு? ஸ்வர்க்கத்தின் வாசப்படில டிக்கட் கவுண்டர் க்ளோஸ் ஆயிடுத்தா? ஏன்? ஹவுஸ்புல்லா? ப்ளாக்ல கேட்டுப்பார்க்கலாமா? எக்ஸ்க்யூஸ்மி.. நீங்க வழக்கமா இங்க தானே இறங்குவீங்க? அதான் நான் உங்களை எழுப்பினேன்.


                       எப்போவும் என்னைப்பார்த்து சிரிக்காத பெண் இன்னைக்கு என்னை ஸ்டாக் பண்ணிண்டு இருந்திட்டு, என்னை ஸ்வர்க்கத்தில் எண்ட்ரன்ஸ் டிக்கெட் எடுக்கவுடாம பண்ணிருக்கா, ப்ளடி நோ.. நான் இனிமேத்தான் இறங்குவேன். இல்லே.. நீங்க உங்க ஸ்டாப்பை மிஸ் பண்ணிடுவீங்களோன்னு தான் எழுப்பினேன்.


                      ஹெ ஹெ ஹே.. தேங்க்யூ. நான் இப்போ இறங்கலை.. மறுபடியும் கண்ணை டைட்டா மூடிண்டு டிக்கெட் கவுண்டருக்குள்ள கை விட்டு கேட்டுப்பார்த்தேன். போம்மா அங்குட்டுன்னு யாரோ ரேஷன் கடையில என்னை தள்ளி விட்டுட்டாங்க. சோட முத்தான்.. போச்சா.. உங்க கர்ட்டஸி லெவலுக்கு ஒரு அளவில்லையாடா?


                  இந்தப்பக்கம் தொல்லை.. அந்தப்பக்கம் அன்புத்தொல்லை. சுத்தமா முடியலை! ஒரே ஒரு நாள் ஒரு மணி நேரம் தூங்கலாம்ன்னு நினைச்சது ஒரு குத்தமாய்யா? வொய் லார்டு வொய்.. அவ்வூ..


 


-அனன்யா மகாதேவன்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,