வேகமாக வளரும் பொன்னியின் செல்வன்

             'பொன்னியின் செல்வன் மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. அதில்  ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரின் காட்சிகளைப் படமாக்கி வந்தார் மணிரத்னம். தாய்லந்தில் படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

             சமீபத்தில்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு  வீர வாள் கொண்ட 'பொன்னியின் செல்வன்' படத்தின் லோகோவை வெளியிட்டு படத்தின் பிரம்மிப்பை காட்டியிருந்தனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஆச்சர்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு மாதத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்து அசத்திய படக்குழு தற்போது சென்னை திரும்பியுள்ளனர்.மேலும் மிக விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

......ருத்ரா

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி