4நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு


பின்லாந்து நாட்டின் 4 வது பெண் பிரதமாரக அண்மையில் பதவியேற்றார் சன்னா மிரீன். 34 வயது ஆகும் இவர் உலகின் இளம் பிரதமர் என்ற பெருமையும் பெற்றார். பதவியேற்ற காலம் முதல் நாள்தோறும் மக்கள் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்து நாட்டு மக்களிடம் பெரும் வரேவற்பை பெற்று வருகிறார் மரீன்.




 


வளர்ந்து வரும் நாடுகளில் தொழிலாளர்களின் நலன் மீது கூடுதல் அக்கரை செலுத்துவது வழக்கம். அதன்படி, தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை எனவும், அதுவும் நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம் வேலை செய்தால் போதும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பின்லாந்து பிரதமர் சன்னா மாரின்.




3 நாட்கள் வழங்கப்படும் விடுமுறையில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மன அழுத்தம் இல்லாமல் வேலை செய்பவர்கள் பணியில் இருந்தால் நாட்டின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என குறிப்பிட்டார்.


மேலும், இந்த அறிவிப்பின் மூலம் மக்கள் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என நான் நம்புகிறேன். பிடித்தவர்களுடன் நேரத்தை பொழுதுபோக்குவது, ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்குவது, பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது போன்றவை மிகவும் அவசியமானது. தொழிலாளர்கள் தங்கள் விடுமுறைக் காலத்தையும், வேலை நாளில் மிச்சமாகும் நேரத்தையும் தங்கள் குடும்பத்தினருடன் செலவிடுவதால் வேலை நாட்களின் போது வேலையில் அதிக கவனம் செலுத்துவார்கள் என்று தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,